பிரம்மாண்டத்தின் இயக்கத்தில் பிரமாண்ட கதையில் சூர்யா.! விரைவில் படமாகும் வேள்பாரி.!
பிரபல எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” நாவல் படமாவப்போவதாகவும், அந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயங்குவதாகவும் சூர்யா அப்படத்தை தயாரித்து நடிக்கிறார் என்று தகவல்கள் பரவி வந்தது.
இந்த தகவல் கிட்டதட்ட உண்மை ஆகிவிட்டதாக நம்மபதக்க சினிமா வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றார்கள். ஏற்கனவே விருமன் பட இசைவெளியீட்டு விழாவில், சூர்யாவும், எம்.பி சு.வெங்கடேசனுடன் இணைந்து ஒரு படம் தொடங்கி இருப்பதாகவும் இது குறித்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்களேன்- அஜித் – விஜய் தமிழ் சினிமா தொழிலாளர்களை கண்டுகொள்வதில்லை.! கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்.!
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு ஷங்கர் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்திற்கான அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.