எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 16 வயது சிறுமி! பிரதமர் வாழ்த்து..!

Default Image
நேபாளத்தில் உலகின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் அமைந்துள்ளது. 8,848 மீட்டர் உயரம் கொண்ட அந்த சிகரத்தில் ஏறுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அங்கு நிலவும் உறைபனி, கடுமையான நிலப்பரப்பு போன்றவற்றால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. Image result for எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை
இருப்பினும், மலை ஏற்றத்தில் அதிக ஆர்வம் உள்ள ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பினரும் அந்த மலை மீது ஏறி சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில், அரியானா மாநிலத்தில் உள்ள பிசார் என்ற இடத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி சிவாங்கி பதக், எவரஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இளம் வயதில் எவரெஸ்டை தொட்ட இந்திய பெண் என்ற பெருமை இவர் பெற்றுள்ளார். Image result for எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை
இது குறித்து அவர் பேசுகையில், ‘உடல் ஊனத்துடன் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் இந்தியரான அருணிமா சின்ஹாவின் சாதனையால், நான் ஈர்க்கப்பட்டேன். அவரின் அந்த முயற்சி தான் என்னையும் சாதிக்கத் தூண்டியது ‘ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த சாதனையை படைத்த சிவாங்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவு செய்திருந்த வாழ்த்து செய்தியில், மகத்தான சாதனை. வாழ்த்துக்கள் சிவாங்கி, என பதிவு செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்