மேலும் ஒரு வீடியோ கண்டுபிடிப்பு.! சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகள் வழக்கில் அடுத்த நகர்வு.!

Default Image

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் விடியோவை லீக் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவியிடம் இருந்து மேலும் ஒரு வீடியோ கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள்ளது. விடியோவை வெளிநாட்டிற்கு விற்றுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் பிரபல சண்டிகர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் புதியதாக சேர்ந்த மாணவிகளுக்கு விடுதி பற்றாக்குறை காரணமாக, காலியாக இருந்த ஆண்கள் விடுதியில் புதிய மாணவிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆண்கள் விடுதி என்பதால் அதற்கேற்றாற்போல பொதுவான குளியல் இடம் தான் இருந்துள்ளளது. அதில், மாணவிகள் ஒன்றாக குளிக்கும் வண்ணம் தான் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு எம்.பி.ஏ படிக்கும் மாணவி ஒருவர் மாணவிகள் குளிக்கும் விடியோவை எடுத்து அதனை சிம்லாவை சேர்ந்த சன்னி மேக்தாவிடம் அந்த விடியோவை பகிர்ந்துள்ளார். அந்த விடியோவை ரங்கஜ் வர்மா என்பவருடன் சேர்ந்து விடியோவை சன்னி மேக்தா இணையத்தில் லீக் செய்துள்ளார்.

 இந்த சம்பவம் நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்கலைகழக மாணவ மாணவிகள் மத்தியில் கொந்தளிப்பபை ஏற்படுத்தியது. போராட்டங்கள் வெடித்தன. இதனை கட்டுப்படுத்த பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து சம்பந்தப்பட்ட  மாணவி, சன்னி மேக்தா, ரங்கஜ் வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில், 7 நாள் விசாரணைக்கு காவல்த்துறை வசம் ஒப்படைக்கப்பட்டனர். 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் ஒரு வீடியோ சம்பந்தப்பட்ட மாணவியிடம் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த விடீயோவில் யாருடைய முகமும் தெளிவாக தெரியவில்லை என தெரிகிறது.

தற்போது 3 பேரின் செல்போன்களை பறிமுதல் செய்து சைபைர் கிரைம் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். இவர்கள் வீடியோ எடுத்து, அதனை வெளிநாட்டில் சட்டவிரோதமாக விற்றுள்ளார்களா என்ற கோணத்தில் தான் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்