#BREAKING: தமிழகத்தில் 1,166 பேருக்கு இன்புளுயன்சா.. நாளை 1000 இடங்களில் சிறப்பு முகாம் – அமைச்சர்
காய்ச்சல் தொடர்பாக நாளை தமிழகத்தில் 1000 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என அமைச்சர் அறிவிப்பு.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,166-ஆக அதிகரித்துள்ளது. பாரு நிலை மாற்றங்களால் காய்ச்சல் சற்று அதிகரித்துள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் நாளை 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது என அறிவித்தார். சளி, தலைவலி, இருமல் உள்ளிட்ட பாதிப்பு இருப்பவர்கள் சிறப்பு காய்ச்சல் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம்.
காய்ச்சல் அல்லது அறிகுறிகள் இருந்தால் மக்கள் முகாம்களுக்கு சென்று பரிசோதித்து கொள்ளலாம். நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமும் பரிசோதனைகள் நடைபெறுகிறது. கொரோனா முடிவுக்கு வந்து விட்டது என்று அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் கட்டுக்குள் உள்ளது, யாரும் பயப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.