“அடிப்படை உரிமைகளை காக்க மாணவர்கள் தங்கள் படிப்பை பயன்படுத்த வேண்டும்” – முதல்வர்
சட்டம் தாண்டி, சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதல்வர் உரை.
சென்னை பெருங்குடியில் நடந்த டாக்டர்.அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், 1997-ல் கலைஞரால் தெற்காசியாவிலேயே முதல் முதலாக சட்ட பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதுதான் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம். தற்போது திமுக ஆட்சியில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழா நடைபெறுகிறது. 1989-ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்டு சட்ட கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர் சூட்டியவர் கலைஞர்.
தனக்காக ஒதுக்கப்பட்ட அரசு மாளிகையான பூம்மொழில் இல்லத்தை சட்ட கல்லூரிக்காக வழங்கியவர் கலைஞர். சட்டபடிப்புக்காக பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது தமிழ்நாட்டில் தான். நீதிக்கு வெற்றி தேடித்தரும் வழக்கறிஞர்களாக மாணவர்கள் விளங்க வேண்டும். கிரீன்வேஸ் சாலையில், தான் குடியேற இருந்த இல்லத்தை அம்பேத்கர் பகலைக்கழகத்துக்கு ஒதுக்கியவர் கலைஞர். சட்டம் படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் நீதியின் தூதுவர்களாக திகழ வேண்டும்.
அடிப்படை உரிமைகளை காக்க மாணவர்கள் தங்கள் படிப்பை பயன்படுத்த வேண்டும். நீதிக்கு வெற்றி தேடித்தரும் வழக்கறிஞர்களாக இருக்க வேண்டும். சட்டப் பல்கலைக்கழகம் மேலும் பல சட்ட மாமேதைகளை உருவாக்க வேண்டும். வாதத்திறமையை ஏழை, எளிய மக்களின் நலன்களுக்காக பயன்படுத்த வேண்டும். அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளையும், சமூக நீதியையும் நிலைநாட்டும் வகையில் வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.