நான் மட்டும் தான் ஒரே ஹீரோ… இங்க வேற யாரும் இல்லை.! – அதிரடி நாயகன் ராமராஜன் பேச்சு.!
1990-களில் வெள்ளிவிழா நாயகனாக இருந்த நடிகர் ராமராஜன், நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த 2012-ம் ஆண்டு ‘மேதை’ படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து எந்த படங்களிலும் நடிக்காத ராமராஜன் 10 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் நாயகனாக “சாமானியன்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை இயக்குனர் ராஹேஷ் என்பவர் இயக்குகிறார். படத்தை எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். படத்தில் நடிகர் ராமராஜனுடன், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இதையும் படியுங்களேன்- அத செஞ்சிட்டா குட் பை சொல்லிட்டு போக வேண்டியது தான்.! ரகசியத்தை உடைத்த சீரியல் இளம் சிட்டு.!
அச்சு ராஜாமணி இசை அமைக்கும் இந்த படத்திற்கு அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கான டீசரும் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய ராமராஜன் ” 50 படங்களில் தனி ஹீரோவாக நடிக்க வேண்டும் என நான் நினைத்தேன். இதுவரை 44 படங்களில் நான் தனி ஹீரோவாக நடித்துள்ளேன். வேறு யாரும் அப்படி நடித்தது இல்லை. 50 படம் வரை இப்படித்தான் நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.