ஃபெடரரின் கடைசி போட்டிக்கான இரண்டாம் நிலை சந்தை டிக்கெட்டின் விலை ₹50 லட்சம்
இருபது முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் 41 வயதில் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.வாரம் லண்டனில் நடைபெறவுள்ள லேவர் கோப்பை தனது கடைசி ஏடிபி போட்டியாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில்,ரோஜர் பெடரரின் கடைசி போட்டியான லேவர் கோப்பைக்கான இரண்டாம் நிலை சந்தை டிக்கெட் கட்டணம் 59,000 பவுண்டுகளாக (₹50 லட்சத்திற்கும் அதிகமாக) உயர்ந்துள்ளது என்று தி சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
“இது மக்கள் தங்கள் டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்கிறார்கள், ரோஜரின் ஓய்வை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள்” என்று ஒரு ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.