SBI அதிரடி.! குறிப்பிட்ட பரிவர்தனைகளுக்கு SMS கட்டணம் ரத்து.!

Default Image

மொபைல் ஆப் மூலம் பணம் பரிவர்த்தனைகள் செய்வதற்கு வசூலித்துவந்த sms கட்டணத்தை எஸ்.பி.ஐ வங்கி நீக்கியது.

இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதிக அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. தற்பொழுது எஸ்பிஐ, தன் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ஒரு புதிய சலுகையை வழங்கியுள்ளது. இதன் படி, மொபைல் ஆப் மூலம் நாம் செய்யும் பணபரிவர்தனைகளுக்கு இதுவரை வசூலித்து வந்த கட்டணத்தை நீக்குவதாக அறிவித்தது.

இதனை, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நமது மொபைலில் *99# என்ற எண்ணுக்கு டயல் செய்வதன் மூலம் இந்த சலுகையை பெறலாம். இந்த சலுகையில், பணத்தை அனுப்பவும், பெறவும், பேலன்ஸ் சரி பார்க்கவும், UPI PIN மாற்றிக்கொள்ளவும் கட்டணமின்றி இலவசமாகப் பெற முடியும்.

வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணில் இந்த சலுகைகளை நாம் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்