டைனோசரின் முட்டைகள் கண்டுபிப்பு.. வியப்பில் சீன ஆராய்ச்சியாளர்கள்!
டைனோசர்கள் என்பது டைனோசௌரியா என்ற கிளேட் வகை ஊர்வனவற்றின் பல்வேறு குழுவாகும். இவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் டைனோசர்களின் பரிணாம வளர்ச்சியின் சரியான தோற்றம் மற்றும் அழிவு பற்றி தெளிவாக இன்னும் அறியப்பட்டவில்லை.
இந்நிலையில் உலகின் பல பகுதிகளில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் மற்றும் தடையங்கள் கிடைத்துள்ளன.
அந்த வகையில் தற்போது சீனாவில் பீரங்கி குண்டு வடிவில் டைனோசர்களின் 2 முட்டைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த முட்டைகள் குறித்து ஆராச்சியாளர்கள் கூறுகையில், இந்த முட்டைகள் ஆர்னிதோபாட் , அதாவது சிறிய தாவர உண்ணும், இரு கால் டைனோசர்களாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.