பாலியல் வன்கொடுமை.! தண்டவாளம் அருகே சடலமாக மீட்கப்பட்ட பட்டியலின சிறுமி.!

Default Image

உ.பியில் பரோலி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பட்டியலின சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அப்பகுதியில் இனிப்பு கடை நடத்தி வரும் ஒப்பந்த மின்தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.   

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் தற்போது உத்திர பிரதேசத்தில் நடந்த சம்பவம் மனதை பதறவைக்கிறது.

மனநலம் பாதிக்கப்பட்ட பட்டியலின சிறுமி ஒருவர் உத்திரபிரதேச மாநிலம், பரோலி அருகே, தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தை மீட்டு போலீசார் செய்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

பரோலி மாவட்டத்தில் ஒப்பந்த மின்தொழிலாளியாக பணியாற்றி வந்த ஒரு நபர், அதே ஊரில் இனிப்பு கடையும் வைத்துள்ளார். அந்த இனிப்பு கடைக்கு அருகே அச்சிறுமி வந்து நிற்பது வழக்கமாம். சம்பவத்தன்று அந்த சிறுமிக்கு இனிப்பு கொடுத்து மின்தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அப்போது அச்சிறுமி சத்தம்போட கூடாது என வாயில் மண் வைத்து திணித்துள்ளார் அந்த குற்றவாளி. இதனால் அச்சிறுமி உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ள்ளது. தற்போது அந்த ஒப்பந்த தொழிலாளியை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்