தைவானில் 6.8 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம் விடீயோக்களின் தொகுப்பு
தைவானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, 6.8 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தைவானின் தென்கிழக்கு கடற்கரை பகுதியான டைடுங் நகரில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ரயில்கள் தடம் புரண்டன, மேலும் டைடுங் நகரின் ஒரு கடை இடிந்து விழுந்துள்ளது.
தைவானின் மீட்புக்குழுவினர் தெரிவித்த தகவலில், ஒருவர் உயிரிழந்ததாகவும் 146 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும், ரயில்வே ப்ளாட்பாரத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
தெற்கு பகுதியில் உள்ள நகரங்களான தைனான் மற்றும் காசியுங்கில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் இரண்டு டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பிற்கு அருகில் இருப்பதால் தான் அடிக்கடி பூகம்பங்களுக்கு உள்ளாக நேரிடுகிறது.
#Taiwan earthquake pic.twitter.com/gisIZLU0ne
— DEFCON (@DEFCONNEWSTV) September 19, 2022
Taiwan Earthquake shaking the whole train.pic.twitter.com/7bKFT6YrKG
— Global OTT (@global_ott) September 19, 2022
A 6.8 magnitude earthquake hit the sparsely populated southeastern part of Taiwan on Sunday.#Taiwan #Earthquake #TaiwanEarthquake #Tsunami pic.twitter.com/vu18uEg9Q5
— Aprajita Choudhary ???? (@aprajitanefes) September 19, 2022