#JustNow: அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் – UGC உத்தரவு
ராகிங்கைத் தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என UGC உத்தரவு.
ராகிங்கைத் தடுக்க அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று UGC உத்தரவிட்டுள்ளது. ராகிங்கைத் தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், வகுப்பறைகள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை மணியையும் முக்கிய இடங்களில் பொருத்த வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) உத்தரவிட்டுள்ளது.
ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மேலும், ராகிங் விழிப்புணர்வு போஸ்டர்களை ஓட்ட வேண்டும் என்றும் ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என ஒவ்வொரு மாணவரும் www.antiragging.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது.