ரஜினிகாந்துக்கு சவுக்கடி கொடுத்த குமாரசாமி!உங்களுக்கு தேவைனா கர்நாடக அணைகளை நேரில் வந்து பாருங்க!
நடிகர் ரஜினிகாந்துக்கு கர்நாடக அணைகளைப் பார்வையிட வருமாறு அம்மாநில முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்றுச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகத்தில் புதிதாக முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள குமாரசாமிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகம் தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் ரஜினிகாந்த் அப்போது கேட்டுக்கொண்டார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள குமாரசாமி, கர்நாடக அணைகளையும், விவசாயிகளின் நிலைமையையும் பார்வையிட ரஜினிகாந்த் அங்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
அவ்வாறு கர்நாடகத்துக்கு ரஜினிகாந்த் வருவாரானால், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்கிற தனது நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்வார் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார். அணைகளைப் பார்வையிட்ட பின்னும் தண்ணீர் திறந்துவிட ரஜினி கோரினால் அதுபற்றி விவாதிக்கத் தயார் என்றும் குமாரசாமி குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.