பி.ஆர்.பாண்டியனை உடனே விடுவிக்க வேண்டும் – சசிகலா ட்வீட்

Default Image

பிஆர் பாண்டியனை தமிழக காவல்துறை கைது செய்து இருப்பது அவசியமற்றது என்று சசிகலா கண்டனம்.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை எதிர்த்து அரசியல் கட்சி தலைவர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், பரந்தூரில் விமான நிலையத்தை எதிர்த்து அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க சென்ற விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டார்.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பி.ஆர்.பாண்டியன் கைது குறித்து வி கே சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னை, பரந்தூர் பகுதியில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து அப்பகுதிமக்கள் ஜனநாயக முறையில் தொடர்ந்துபோராடி வருகிறார்கள்.
அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தி, அவர்களின் அனுமதி பெறாமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்திவிட முடியாது. அது நியாயமும் அல்ல.

பரந்தூரில் போராடுகிற மக்களை சந்திக்க சென்ற தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர் பாண்டியனை தமிழக காவல்துறை கைது செய்து இருப்பது அவசியமற்றது. எனவே, பிஆர் பாண்டியன் அவர்களை உடனே விடுவிக்க வேண்டும்என தமிழக காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயக முறையில் தங்களின் உரிமைகளுக்காக போராடுகிற மக்களை சென்று சந்திப்பவர்களையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் தமிழக அரசு தடுக்க நினைப்பது நியாயமற்றது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்