IPL 2018:வெற்றியை பெற்றுத்தந்த தோனியின் புது வியூகம்!ஒரு வேலை வெற்றி பேரவில்லை என்றால் என்னவாயிருக்கும் தோனியின் நிலை?

Default Image

நேற்று இரவு புனேவில்  ஐபிஎல் போட்டியின் கடைசி 56வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்றது.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

பேட்டிங் ஆட களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார், பின்ச் 4 ரன்களிலும், ராகுல் 7 ரன்களிலும் அவுட் ஆகி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு ஜோடியாக மனோஜ் திவாரி, மில்லர் 60 ரன்களைச் சேர்த்தனர்.

அடுத்து வந்த கருண் நாயர் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 5 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உட்ப 54 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயரக் காரணமாக இருந்தார்.

இருப்பினும் சென்னை அணி கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்து வீசியதால் பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது.

சென்னை அணி தரப்பில் என்கிடி 4 விக்கெட்டுகளையும், தாகூர், பிராவோ 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, சஹர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் பேட்டிங் ஆட வந்த சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அம்பாதி ராயுடு 1 ரன்னில் அவுட் ஆனார். டுபிளிசிஸ் 14 ரன்களிலும், சாம் பில்லிங்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.

5வது ஓவரில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது. அடுத்து வந்த ஹர்பஜன் சிங் ஓரளவிற்கு விளையாடி ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் அடித்து கொஞ்சம் ஸ்கோரை உயர்த்தினார். அவர் அவுட் ஆன பின் வந்த தீபக் சஹர் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 3 சிக்சர்கள், 1 பவுண்டரி உட்பட 39 ரன்கள் எடுத்தார். அவருடைய ஆட்டத்தால் சென்னை அணிக்கு தெம்பு வந்தது.

பின்னர் சுரேஷ் ரெய்னா, தோனி ஜோடி சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. ரெய்னா 48 பந்துகளில் 2 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 61 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

சென்னை அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வருட ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற்ற சென்னை அணி, கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணியையும் வென்று வெற்றிக் களிப்புடன் அவர்களது லீக் ஆட்டங்களை முடித்துள்ளது.

4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய என்கிடி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இதுகுறித்து, தோனி கூறியதாவது,”பஞ்சாப்பின் பந்துவீச்சு வரிசையை பார்க்கும் போது அன்கித்துக்கு பந்து நன்றாக ஸ்விங் ஆனது. கேப்டனின் பார்வையில், முன்னதாக எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்த முடியுமோ அத்தனை விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அதனால் தான் குழப்பத்தை உண்டாக்க ஹர்பஜன் மற்றும சாஹரை முன்னதாக அனுப்பினோம்.

அதனால், பந்துவீச்சாளர்கள் பவுன்சர்களும் யார்க்கர்களுமாக வீசத் தொடங்கினர். பேட்ஸ்மேன் பேட்டிங் செய்தால் தங்களது திட்டப்படி சரியான இடத்தில், சரியான அளவில் பந்தை வீசி திணறடித்து இருப்பர். ஆனால், ஹர்பஜன் மற்றும் சாஹருக்கு எதிராக அவர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்தாமல் அவர்களது சரியான இடம் மற்றும் அளவை மறந்துவிட்டனர்.

அதுமட்டுமில்லாமல், பிளே ஆஃபில் ஹர்பஜனும் சாஹரும் அவர்களது பங்கை அளிப்பர்” என்றார்.

தோனியின் இந்த வியூகம் அவருக்கு வெற்றியை தந்துள்ளது. இல்லையெனில், பல விமர்சனங்களுக்கு அவர் பதில் கூற கடமைப்பட்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும்.ஒருவழியாக தப்பித்தார் தோனி.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்