அரசு கடமையை செய்கிறது.! குற்றமற்றவர்கள் என முன்னாள் அமைச்சர்கள் நிரூபிக்க வேண்டும்.! ஓபிஎஸ் அதிரடி.!
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயகுமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீதான ரெய்டு நடவடிக்கை பற்றி ஓபிஎஸிடம் கேட்கப்பட்டபோது, ‘ அரசு அவர்கள் கடமையை செய்கின்றனர். குற்றமட்டவர்கள் என்று அவர்கள் தான் நிரூபிக்க வேண்டும்.’ என தனது கருத்தை தெரிவித்தார்.
இன்று தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்திவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விக்கு பதில் கூறினார்.
அப்போது, அதிமுக மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமசந்திரன் அவர்களை விமர்சனம் செய்த இபிஎஸ் கூறியதற்கு எதிராக, ‘பண்ருட்டி ராமசந்திரன் அவர்கள் ஐநாவில் நம் நாட்டிற்காக பேசி அதிமுகவுக்கு பெருமை சேர்த்தவர்.’ என்று பேசியிருந்தார்.
மேலும், ‘ நான் 21 வருடம் அம்மாவுடன் பயணித்துள்ளேன். அவர் இரண்டு முறை என்னை முதல்வராக அமரவைத்தார். அம்மா கூறும் வாக்கு தான் எங்களுக்கு வேத வாக்கு. மக்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. அதனை காப்பாற்ற தான் நாங்கள் போராடுகிறோம்.’ என்றும் கூறினார்.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயகுமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீதான ரெய்டு நடவடிக்கை பற்றி கேட்கப்பட்டபோது, ‘ அரசு அவர்கள் கடமையை செய்கின்றது. குற்றமற்றவர்கள் என்று அவர்கள் தான் நிரூபிக்க வேண்டும். ‘ என்று கூறினார்.