கொடைக்கானலில் 57-வது மலர்கண்காட்சி நிறைவு பெற்றது!
கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் நிலையில், கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளை கவர, ஆண்டு தோறும் கோடை விழா கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், பல்லாயிரக்கணக்கான வண்ண மலர்கள் பூத்து குலுங்கின. காட்சியரங்குகளில் தனியார் தோட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர்கள், காட்சிபடுத்தப்பட்டன.
சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக உருவாக்கப்பட்ட யானை, மயில், தாஜ்மகால் உள்ளிட்ட மலர் சிற்பங்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
இந்த மலர்க் கண்காட்சி நிறைவு நாளில், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.