இந்திய ராணுவத்தின் பதிலடிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கெஞ்சிய பாகிஸ்தான், மீண்டும் அத்துமீறி தாக்குதல்!
பாகிஸ்தான் ராணுவம்,இந்திய ராணுவத்தின் பதிலடிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சிய நிலையில், மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் எல்லைக்கு அப்பால் இருந்து அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் படைக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம், பாகிஸ்தானின் பதுங்கு குழிகளை தாக்க அழித்ததற்கான வீடியோவையும் வெளியிட்டது.
இதனால் நிலைகுலைந்து போன பாகிஸ்தான் ராணுவம், ஜம்முவில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை முகாமை தொடர்பு கொண்டு தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, இந்திய படையினர் தாக்குதலை நிறுத்திய அடுத்த சில மணி நேரத்தில், ஜம்முவின் ஆர்னியா பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.
சிறிய ரக மோட்டார் குண்டுகளை வீசி, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு தக்க பதிலடி கொடுத்திருப்பதாகவும், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுக்கப்படும் என்றும் ராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.