மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்…! கடைசி தேதி இதுதான்…!

Default Image

மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விபரங்கள். 

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம், 2005, பிரிவு 17(1)ன்படி மாநிலத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிக்கான நியமனம் செய்ய வேண்டி ஆணையத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பபடிவங்கள் மற்றும் தேவையான தகுதி
விவரங்கள் www.tn.gov.in/department/30(Social Welfare and Women Empower Department) шmb www.tncpcr.tn.gov.in (Tamil Nadu Commission for Protection of Child Rights) என்ற இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு அதற்கான அமைந்த படிவத்தில் புகைப்படத்துடன் (Pass-Port Size) 14.10.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம் : செயலர்,
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம். நெ.183/1.ஈ.வே.ரா.பெரியார் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை-10.

முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.’  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

children

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்