சீசன் பறவை போல் தாவுபவர் பண்ருட்டி ராமச்சந்திரன் – ஜெயக்குமார்
சீசன் பறவை போல் தாவுபவர் பண்ருட்டி ராமச்சந்திரன் என ஜெயக்குமார் விமர்சனம்.
அதிமுகவின் மூத்த உறுப்பினரான பண்ருட்டி ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து ஓபிஎஸ் அவர்கள் கூறுகையில், எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா காலத்தில் இயக்கத்திற்காக அரும்பாடுபட்டவர் என்று அடிப்படையில் மரியாதையை நிமித்தமாகவே அண்ணன் மண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தேன் என தெரிவித்திருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சீசன் பறவை போல் தாவுபவர் பண்ருட்டி ராமச்சந்திரன். ஜெயலலிதா இருக்கும்போதே அவரை தவறாக பேசியவர் பண்ரூட்டி ராமசந்திரன் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.