ஐசிசியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் இந்திய வீரர்கள் விபரம் !

Default Image

ஐசிசி அவ்வப்பொழுது வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருவது வழக்கம். வீரர்களின் அப்போதைய பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றைப் பொறுத்து இந்த தரவரிசையில், புள்ளிகள் மாறுவதுண்டு.

நமது இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் வீரர்களைக் கொண்டுள்ள அணியாகவே திகழ்ந்து வருகிறது.

டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ரிஷப் பந்த் பேட்ஸ்மேன் களுக்கான தரவரிசையில் 801 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திலும், கேப்டன் ரோஹித் சர்மா 746 புள்ளிகளுடன் 9 ஆம் இடத்திலும் உள்ளார்.

பந்து வீச்சில் அஸ்வின் 842 புள்ளிகளுடன் 9 ஆம் இடத்திலும் , ஜாஸ்பிரித் பும்ரா 828 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளார். ஆல்ரவுண்டர் வரிசையில் ரவீந்திர ஜடேஜா 384 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இதைத்தொடர்ந்து அஸ்வின் 335 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிகளில் பேட்டிங்கில் விராட் கோலி 744 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், 740 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சில் பும்ரா மட்டுமே டாப் 10 இல், 662 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளார். ஆல்ரவுண்டர் வரிசையில் ஹர்டிக் பாண்டியா 13வது இடத்தில் இருக்கிறார்.

டி-20 போட்டிகளில் பேட்டிங்கில் மிகச்சிறப்பாக விளையாண்டு வரும் சூரியகுமார் யாதவ் 755 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 682 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், ஆல்ரவுண்டர் தர வரிசையில் ஹர்டிக் பாண்டியா 7வது இடத்திலும் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்