நடனமாடிய படி போக்குவரத்தை கட்டுப்படுத்தும் காவலர்!! வைரலாகும் வீடியோ
தனித்துவமான நடன அசைவுகளால் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் போலீஸ்காரர் வைரலாகும் வீடியோ!!
உத்தரகாண்டில் போக்குவரத்து காவலராக பணியமர்த்தப்பட்ட ஹோம் கார்டு, வித்யாசமான பாணியில் போக்குவரத்தை கட்டுபடுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் காவலர் ஒருவர், டேராடூனில் உள்ள சிட்டி ஹார்ட் ஹாஸ்பிடல் பகுதி போக்குவரத்தை நடனமாடி ஒழுங்குபடுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
மேலும் அவர் அந்த பகுதியை கடக்கும் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு விசில் அடித்து சிரித்துக் கொண்டே போஸ் கொடுக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
#WATCH | Uttarakhand: Jogendra Kumar, a Home Guard deployed as a Traffic Police personnel near City Heart Hospital in Dehradun, controls the vehicular movement of traffic in a unique way. pic.twitter.com/zy2yyrhMio
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 15, 2022