தமிழகத்தில் இன்ஃபுளூவென்சா காய்ச்சல்.! முன்னெச்சரிக்கை நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை.!

Default Image

பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் இன்ஃபுளூவென்சா காய்ச்சல் முன்னெச்சரிக்கை நெறிமுறைகளை அனுப்பியுள்ளார்.  

தமிழகத்தில் தற்போது இன்ஃபுளூவென்சா காய்ச்சலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துள்ள இந்த நேரத்தில் தான் இன்ஃபுளூவென்சா காய்ச்சல் சற்று தலை தூக்க ஆரம்பித்துள்ளது.

இதனை ஆரம்பத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை களத்தில் இறங்கியுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் முன்னெச்சரிக்கை நெறிமுறைகளை அனுப்பியுள்ளார்.

அதன்படி, திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி , மூக்கடைப்பு , தலைவலி, உடல்வலி, உடல் சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்பட்டால், அது இன்ஃபுளூவென்சா காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கலாம். அதற்கு காய்ச்சலுக்கான சிகிச்சையை உடனடியாக அளிக்க வேண்டும்.

லேசான இன்ஃபுளூவென்சா காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அளித்து  48 மணிநேரம் கண்காணிப்பில் வைத்து இருக்க வேண்டும்.
65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள், 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் , நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் இந்த காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுடன் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அந்த முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல் நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்