மத்திய அரசு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் இ-விசா மூலம் ரூ.1,400 கோடி வருவாய்!

Default Image

மத்திய அரசுக்கு,இந்தியாவிற்கு வருகை புரியும், சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் இ-விசா திட்டத்தின் மூலம், 1400 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த, 2014 முதல், 163 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு, ‘இ – விசா’ வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. வழக்கமான விசாக்களுக்கு மாறாக, இ – விசா, மின்னணு முறையில் வழங்கப்படுகிறது.

வெளிநாட்டு பயணியர், இந்தியாவில் நுழையும்போது, விமான நிலையம் அல்லது துறைமுகத்தில், பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு அதிகாரிகளால், கம்ப்யூட்டர்கள் மூலம், இ – விசாக்கள் சரிபார்க்கப்பட்டு அனுமதி வழங்கப்படும். இ – விசா மூலம், நான்கு ஆண்டுகளில், அரசுக்கு, ஆயிரத்து 400 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்