#Breaking : 15 வயது சிறுமி பாலியல் வழக்கு.! 21 பேர் குற்றவாளிகள்.! சென்னை நீதிமன்றம் தீர்ப்பு.!

Default Image

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் காணாமல் போயுள்ளனர். ஒருவர் விசாரணை காலத்தில் உயிரிழந்துவிட்டார். மீதம் உள்ள 21 பேர் குற்றவாளிகள்.

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தை உலுக்கிய சம்பவம் என்றால் அது சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் ஆய்வாளர் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தான்.

இந்த வழக்கு விசாரணை சென்னை, போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில்நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில், காவல் ஆய்வாளர் புகழேந்தி, மதன்குமார், சாயிதா பானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா எனும் கஸ்தூரி, ராஜேந்திரன், காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ)அஜய் கண்ணண் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பை வழங்கியுள்ளார் நீதிபதி ராஜலக்ஷ்மி.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் காணாமல் போயுள்ளனர். ஒருவர் விசாரணை காலத்தில் உயிரிழந்துவிட்டார். மீதம் உள்ள 21 பேர் குற்றவாளிகள். அவர்களின் தண்டனை விவரம் வரும் 19ஆம் தேதி அறிவிக்கப்படும் என தீர்பளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்