அறிவுத் தீனி தேடி வரும் மாணவச் செல்வங்களுக்கு இது ஒரு நல்ல திட்டமாகும் – ராமதாஸ்

Default Image

அறிவுத் தீனி தேடி வரும் மாணவச் செல்வங்களின் வயிற்றுப் பசியை போக்குவதற்கான இந்தத் திட்டம் நல்ல தொடக்கம் ஆகும் டாக்.ராமதாஸ் ட்வீட். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்திற்கு பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திருக்கிறார். அறிவுத் தீனி தேடி வரும் மாணவச் செல்வங்களின் வயிற்றுப் பசியை போக்குவதற்கான இந்தத் திட்டம் நல்ல தொடக்கம் ஆகும்!

ஐந்து வயதான அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளுக்கு கொண்டு வருவதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். பள்ளியில் சேர்ந்த மாணவர்களை தக்கவைத்துக் கொள்ள அவர்களின் பசியைப் போக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவும்!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுகளில் படிப்படியாக சிறு தானியங்களை சேர்த்து, அவர்களின் ஊட்டச் சத்தை மேம்படுத்த வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்