“தம்பி! உன்னைத்தான் தம்பி…” – அண்ணா பிறந்தநாளையொட்டி முதல்வர் ட்வீட்…!
முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மலர்தூவி, மாலையணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மலர்தூவி, மாலையணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘”தம்பி! உன்னைத்தான் தம்பி…” என அரசியல் விழிப்புணர்வூட்டி, முற்போக்குச் சிந்தனைகளால் தமிழினத்தை மீட்ட அண்ணன் – ஈன்றெடுத்த தமிழன்னைக்குப் பெயர்சூட்டிய பெருமகன் – நம் தமிழ்நாட்டின் தலைமகன், பேரறிஞர் அண்ணா அவர்களை வணங்கி, என்றும் தமிழ்நாட்டு நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம்!’ என பதிவிட்டுள்ளார்.
“தம்பி! உன்னைத்தான் தம்பி…” என அரசியல் விழிப்புணர்வூட்டி, முற்போக்குச் சிந்தனைகளால் தமிழினத்தை மீட்ட அண்ணன் – ஈன்றெடுத்த தமிழன்னைக்குப் பெயர்சூட்டிய பெருமகன் – நம் தமிழ்நாட்டின் தலைமகன், பேரறிஞர் அண்ணா அவர்களை வணங்கி, என்றும் தமிழ்நாட்டு நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம்! pic.twitter.com/P6FV9536yU
— M.K.Stalin (@mkstalin) September 15, 2022