ராணி எலிசபெத் இறுதியாக பயணித்த விமானத்தை பார்த்த 5 மில்லியன் மக்கள்
செவ்வாயன்று ராணி எலிசபெத்தின் இறுதி விமானத்தை 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.
மறைந்த ராணியின் உடலை எடின்பர்க்கில் இருந்து லண்டனுக்கு சுமந்து சென்ற பயணம் வரலாற்றில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக மாறியுள்ளது.
ஃப்ளைட் டிராக்கிங் இணையதளமான Flightradar24, மொத்தம் 4.79 மில்லியன் மக்கள் விமானத்தை ஆன்லைனில் நேரடியாகப் பார்த்ததாகவும், மேலும் கால் மில்லியன் மக்கள் அதன் யூடியூப் சேனலில் பயணத்தைப் பார்த்ததாகவும் கூறியுள்ளது.