நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு வரும் சிறுத்தைகள் வரும் வழியில் நோ சாப்பாடு
இந்தியாவில் ஆப்பிரிக்க சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து வரவழைக்கப் படுவதாக மத்தியபிரதேச தலைமை வனப்பாதுகாவலர் ஜே.எஸ்.சௌஹான் தெரிவித்தார். மேலும் அவை வெறும் வயிற்றில் பயணிக்கும் என்றும் அவர் கூறினார்.
நீண்ட தூர பயணம் விலங்குகளுக்கு குமட்டல் போன்ற சிக்கல்களை உண்டாக்கும் என்பதால் அத்தகைய முன்னெச்சரிக்கை தேவைப்படுவதாகவும் சௌஹான் தெரிவித்தார். இந்த சிறுத்தைகள் செப்டம்பர் 17 ஆம் தேதி மத்தியபிரதேசத்திலுள்ள குனோ-பால்பூரில் உள்ள தேசிய பூங்காவில் அறிமுகப்படுத்தப்படும்.
சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி இந்த சிறுத்தைகளை தனது பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று பூங்காவின் தனிமைப்படுத்தப்பட்ட அடைப்புகளில் விடுவிப்பார்.
விலங்குகள் ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு மாறுவதற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு மாதமும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று வன அதிகாரி கூறியுள்ளார்.
“ஆப்ரிக்கா சிறுத்தைகள் அறிமுகம் திட்டம்” இந்தியாவில் 2009 இல் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.