புதிய அமைச்சர்கள் யார் யார்?இன்று டெல்லியில் சோனியா, ராகுலுடன் குமாரசாமி ஆலோசனை!

Default Image

இன்று டெல்லி சென்று கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் குமாரசாமி நிலையில் சோனியா, ராகுல் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசுகிறார்.

கர்நாடகாவில் அரசியல் திருப்பங்களின் பரபரப்புகள் ஓய்ந்துள்ள நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின், HD குமாரசாமி புதன்கிழமை முதலமைச்சராக பதவியேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு பாஜக அல்லாத மற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு குமாரசாமி மற்றும் தேவகவுடா அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று டெல்லி செல்லும் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
5 ஆண்டுகால ஆட்சியில், தலா இரண்டரை ஆண்டுகளை, இரண்டு கட்சிகளும் பிரித்துக்கொண்டு, ஆட்சி செய்யுமா என்ற கேள்விக்கு, இது வதந்தி என்று குமாரசாமி முற்றுப்புள்ளி வைத்துவிட்ட நிலையில், அமைச்சரவையில் எந்தெந்த இலாக்காக்களை பிரித்துக்கொள்வது என்பது பற்றியும், துணை முதலமைச்சர் பதவி குறித்தும் இன்றைய சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது

இந்தச்சூழலில், தாம் முதலமைச்சராக பதவியேற்ற 24 மணி நேரத்தில், பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டப்போவதாக, கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமி உறுதியளித்திருக்கிறார். பெங்களூரு கண்டீரவா மைதானத்தில், நாளை மறுநாள் நடைபெறும் பதவியேற்பு விழா விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்