ஒவ்வொரு ரன்னுக்கும் ரூ.6.38 லட்சம்! ஐபிஎல்லில் அவர் அடித்த ரன் 196!அதேபோல் வெறும் ரூ.48 ஆயிரம் மட்டுமே வாங்கி 625 ரன்கள் குவித்த பலே வீரர்!

Default Image

ஒரு ரன் அடிக்க ஐபிஎல் 11-வது சீசனில் ஒவ்வொரு போட்டியிலும்  ரூ.6.38 லட்சம் பெற்ற காஸ்ட்லி வீரர் ஒருவர் இருந்துள்ளார்.

இந்த சீசனுக்கு அவரை ரூ.12.5 கோடி கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலைக்கு வாங்கியது. அவர் வேறு யாருமல்ல இங்கிலாந்து அணி வீரரும், சிறந்த ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ்.

இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ்:

Image result for ipl 2018 ben stokes

இங்கிலாந்து மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகில் தலைசிறந்த ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பென் ஸ்டோக்ஸை இந்த ஆண்டு ஏலத்தில் ரூ.12.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அதிகமான விலைக்கு எடுக்கப்பட்டவரும் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே. ஆனால், அவர் கடந்த 13 போட்டிகளில் 196 ரன்கள் சேர்த்து மட்டுமே சேர்த்துள்ளார்.

அடுத்த மாதம் தொடங்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடவேண்டும் என்பதற்காகக் கடந்த வாரம் பென் ஸ்டோக்ஸும், ஜோஸ்பட்லரும் இங்கிலாந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

ஐபிஎல் போட்டிக்கு முன்பாக, இங்கிலாந்தில் மதுபார் ஒன்றில் அடிதடியில் சிக்கிய பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார். பின்னர் எப்படியோ அவரை ராஜஸ்தான் அணி விலைக்கு வாங்கியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 2 ஆண்டுகள் தடைக்குப்பின் ஐபிஎல் தொடருக்குள் வந்துள்ளதால், சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க மிகுந்த ஆர்வம் காட்டியது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி பென் ஸ்டோக்ஸை ரூ.14.50 கோடிக்கு விலைக்கு வாங்கியதால், இந்த ஆண்டு பென் ஸ்டோக்ஸை தாங்கள் எப்படியும் தூக்கிவிட வேண்டும் என்பதில் ராஜஸ்தான் நிர்வாகத்தினர் தீவிரமாக இருந்தனர். அதற்கு ஏற்றார்போல் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுத்தபோதிலும் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஸ்டோக்ஸ் சொதப்பிவிட்டார்.

கடந்த 2017-ம் ஆண்டில் புனே அணியில் இருந்த பென் ஸ்டோக்ஸ் 12 போட்டிகளில் 12 விக்கெட்டுகளையும் 316 ரன்களைக் குவித்தார். ஆனால், இந்த முறை 13 போட்டிகளில் 196 ரன்கள் மட்டுமே பென் சேர்த்தார்.

இங்கிலாந்து  ஜோஸ் பட்லர்:

Image result for ipl 2018 butler

ஆனால், இவரைக் காட்டிலும் குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சக வீரர் ஜோஸ் பட்லர் 13 போட்டிகளில் விளையாடி 548 ரன்கள் குவித்து, 155 ஸ்டிரேக் ரேட் வைத்துள்ளார்.

நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்ஸன்:

Image result for ipl 2018 kane williamson

நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்ஸன் ரூ.3 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். சன்ரைசர்ஸ் அணியைச் சிறப்பாக வழிநடத்துவதோடு மட்டுமல்லாமல், 13 போட்டிகளில் இதுவரை 625 ரன்கள் சேர்த்துள்ளார். அவரின் கணக்கோடு ஒப்பிட்டால், ஒருரன்னுக்கு அவருக்கு கொடுக்கப்பட்டதொகை ரூ.48 ஆயிரம் மட்டுமே. கேன் வில்லியம்ஸன் இன்னும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

ஆனால், ரூ.12.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் ஒரு ரன்னுக்கு ரூ.6.38 லட்சத்தைக் கொடுத்துவிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது. அவரும் தேசிய அணிக்காக விளையாடப் போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக மதிக்கப்படும் பென் ஸ்டோக்ஸ் இந்த ஐபிஎல் சீசனில் பந்துவீச்சிலும், பேட்டங்கிலும் மிகவும் தடுமாறுவதைப் பார்த்து ஏராளமான டிவி வர்ணனையாளர்கள் வருத்தமும், கிண்டலும் செய்துள்ளனர்.

குறிப்பாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறுகையில், பென் ஸ்டோக்ஸ் உங்களுக்கு என்ன ஆயிற்று. இந்த முறை ஐபிஎல் போட்டியில் வழக்கமாக உங்களிடம் காணப்புடம் ஆக்ரோஷம், ஆவேசம் எதுவுமே இல்லையே. தொடர்ந்து இதுபோல் விளையாடினால், உங்களின் தரத்தை குறைத்துவிடும் என்று எச்சரித்து இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்