ம.பியில் கிராம மக்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் ஹெலிகாப்டர் தரை இறங்க வசதியாக மின் வயர்கள் துண்டிக்கப்பட்டதால் மின்சாரம் இன்றி தவிப்பு!
மத்தியப்பிரதேசத்தில் 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள்,உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் ஹெலிகாப்டர் தரை இறங்க வசதியாக மின் வயர்கள் துண்டிக்கப்பட்டதால் மின்சாரம் இன்றி அவதியுற்றனர்.
சாட்னாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ராஜ்நாத் சிங் நேற்று அங்கு சென்றார். அவரது ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்காக உயர் அழுத்த மின் வயர்கள் துண்டிக்கப்பட்டன.
இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் 12 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் கடும் அவதி அடைந்தனர். மின்சார அலுவலகங்கள் முன் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து ராஜ்நாத் சிங்கின் பயண திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. இதை அடுத்து மின்சார விநியோகம் மீண்டும் சீரானது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.