பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு புதிய காரணம் சொன்ன மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் ,கச்சா எண்ணையை உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை குறைத்ததால்தான் விலை உயர்வு என்று கூறியுள்ளார்.எரிபொருள் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்கிறோம் என்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை:
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 35 காசு உயர்ந்து ரூ.79.13 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 28 காசு உயர்ந்து ரூ.71.32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இன்று காலை 6 மணி முதல் இந்த விலை அமலுக்கு வந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.