பஞ்சாப் நேஷனல் வங்கி, கீதாஞ்சலி குழுமத்தன் மீது விதிகளை மீறியதாக செபி நடவடிக்கை..
மோசடி பங்கு பரிவர்த்தனைக் குற்றச்சாட்டு தொடர்பான விவரங்கள் தாக்கல் செய்ய தாமதம் செய்யும் பஞ்சாப் நேஷனல் வங்கி, கீதாஞ்சலி குழுமத்தன் மீது விதிகளை மீறியதாக செபி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
பஞ்சாப் நேசனல் வங்கியில் இருந்து போலியாகக் கடன் உத்தரவாதக் கடிதங்கள் தயாரித்து பல்வேறு வங்கிகளில் 13ஆயிரத்து 578 கோடி ரூபாய் கடன் வாங்கியது தொடர்பாக நீரவ் மோடி, அவர் தாய்மாமன் மெகுல் சோக்சி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்படுகிறது. அவர்களின் மோசடியான பங்குப் பரிவர்த்தனை விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு வாரியமான செபி ஏற்கெனவே எச்சரிக்கைக் கடிதத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி, கீதாஞ்சலி குழுமத்துக்கு கடந்த வாரம் அனுப்பியிருந்தது.
பொதுவாக செபியின் எச்சரிக்கைக் கடிதத்துக்கு உரிய நேரத்தில் பதில் அளிக்காதது அதன் விதிகளின் படி நடவடிக்கைக்குரிய குற்றமாகும். எனவே, அதற்காக விசாரணையின் முடிவில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் செபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.