ஆளுனரை அடித்து உதைத்து தாக்கிய பொதுமக்கள்..!
கிரீஸின் இரண்டாவது பெரிய நகரமான தசலோனிகி நகர ஆளுநரை பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டாக அடித்ததை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
75 வயதான யானில் போட்டரிஸ் தசலோனிகி நகர ஆளுநராக இருக்கிறார். தேசியவாத எதிர்ப்பு பார்வைக்காக இவர் அறியப்படுகிறார்.
ஒன்றாம் உலக போரில் துருக்கியர்களால் கொல்லப்பட்ட கிரேக்க இனத்தவர்களை நினைவுக்கூரும் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் தசலோனிகி வந்தார்.
இவரை அங்கு கூடியிருந்த தேசியவாதிகள் சிலர் அவரை தலையிலும், காலிலும் உதைத்து தாக்கினர்.
இதுவொரு கொடுங்கனவு என்று யானில் போட்டரிஸ் கூறியதாக கிரீக் ரிப்போட்டர் என்ற கிரேக்க இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அந்த இணையதளம், “என்னை பலர் தாக்கினர். உடலின் அனைத்து பகுதிகளிலும் என்னை தாக்கினர்” என்று அவர் கூறியதாக அந்த இணையதள செய்தி விவரிக்கிறது.
காவல்துறை இந்த தாக்குதலை கண்டித்துள்ளது.
கிரேக்க பிரதமர் அலெக்ஸிஸ் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ஆளுநரை தாக்கியவர்களை தீவிர வலதுசாரிகள் என்று வர்ணித்துள்ள அவர், இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றுள்ளார்.
கிரேக்கத்தை ஆளும் இடதுசாரி சிரிஸா கட்சி இதனை பாசிச செயல் என்று வர்ணித்துள்ளது.