மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட ரயில்வே துறை திட்டம்..!
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி 2018, 2019, 2020ஆகிய ஆண்டுகளில் அக்டோபர் இரண்டாம் நாளைப் புலால் உணவு இல்லாத நாளாகக் கடைப்பிடிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளைத் தூய்மை நாளாகவும், புலால் உணவு இல்லாத நாளாகவும் கடைப்பிடிக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி 2018, 2019, 2020ஆகிய 3 ஆண்டுகளும் காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள் ரயில்களிலும், ரயில் நிலைய வளாகங்களிலும் உள்ள உணவகங்களில் இறைச்சி உணவு வழங்கப்படாது.
அதேபோல் உப்புச் சத்தியாக்கிரகத்தை நினைவுபடுத்தும் வகையில் மார்ச் பன்னிரண்டாம் நாள் குஜராத்தின் சபர்மதியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு ரயில்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் காந்தியின் உருவம் வாட்டர்மார்க்காகப் பொறிக்கப்பட்ட பயணச் சீட்டுக்களை வழங்கவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரைகளைப் பண்பாட்டு அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு ரயில்வே வாரியம் அனுப்பியுள்ளது.