புதுச்சேரியை குறி வைக்கும் பாஜக ! ஆட்சியை கவிழ்க்க சதி..!

Default Image

காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோர் முழக்க மிட்டு வருகிறார்கள்.

இதன்படி ஒவ்வொரு மாநிலமாக பாரதீய ஜனதா கைப்பற்றி வருகிறது. கடைசியாக 4 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலையில், கர்நாடக மாநிலத்தையும் கைப்பற்ற பாரதீய ஜனதா முயற்சித்தது. ஆனால், சற்று சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது பஞ்சாப், மிஜோரம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இவற்றையும் எப்படியாவது அகற்ற வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா குறியாக இருக்கிறது.

கர்நாடகாவில் ஆட்சி அமைந்தால் அதன் மூலம் தென்மாநிலங்களின் நுழைவு வாயிலாக அது அமையும் என்று பாரதீய ஜனதா எதிர்பார்த்தது.ஆனால், அதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் குட்டி மாநிலமான புதுவையில் பாரதீய ஜனதா ஆட்சியை ஏற்படுத்தி தென் மாநிலத்தில் நுழைவு வாயிலை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

புதுவையில் ஆட்சியில் உள்ள காங்கிரசுக்கு இடையூறு கொடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை ஏற்கனவே பாரதீய ஜனதா மேற்கொண்டது.

புதுவையில் மொத்தம் உள்ள 30 எம்.எல்.ஏ.க்களில் காங்கிரசுக்கு 15 எம்.எல். ஏக்களும், அதன் கூட்டணி கட்சியான தி.மு.க.வுக்கு 2 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். சுயேச்சை ஒருவர் காங்கிரசுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

இதன் மூலம் 18 எம்.எல். ஏ.க்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரசிடம் 8 எம்.எல்.ஏ.க்களும், அ.தி. மு.க.வுக்கு 4 எம்.எல்.ஏ.க் களும் உள்ளனர்.

காங்கிரசில் சில எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதாவுக்கு இழுத்து இதன் மூலம் ஆட்சி அமைக்கலாம் என பாரதீய ஜனதா திட்டமிட்டது. இதற்கு உதவும் வகையில் பாரதீய ஜனதாவை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது.

இதன் மூலம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 15 ஆனது. இன்னும் 2 பேரை காங்கிரஸ் தரப்பில் இருந்து இழுத்து விட்டால் கூட காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து விடலாம்.

எனவே, அதற்கான முயற்சியை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதே கையில் எடுத்தது. அப்போது என்.ஆர். காங்கிரஸ் கட்சியை பாரதீய ஜனதாவுடன் இணைக்கும்படி அமித்ஷா வற்புறுத்தினார்.

ஆனால், என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இதற்கு தயக்கம் காட்டியதால் அப்போது ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டது.

3 மாதத்துக்கு முன்பு பிரதமர் மோடி புதுவையில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது ரங்கசாமி பிரதமருடன் தனியாக பேசினார். அப்போதும் ஆட்சி கவிழ்ப்பு பற்றி அவர்கள் ரகசியமாக பேசியதாக தெரிகிறது.

இதன் பிறகு ரங்கசாமியை டெல்லிக்கு வரும்படி அழைத்தார். ரங்கசாமி டெல்லி சென்று பிரதமர் மற்றும் அமித்ஷாவை சந் தித்து பேசினார்.

அப்போது இதுபற்றி விரிவாக திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் கர்நாடக தேர்தல் வந்ததால் புதுவையில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை நிறுத்தி வைத்தனர்.

இப்போது கர்நாடக தேர்தல் முடிந்து விட்டதால் மீண்டும் இதை கையில் எடுக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. காங்கிரசில் சில எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் உரிய பிடிப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை. கட்சி அலுவலகத்துக்கு கூட சென்றதில்லை.

இதுபோன்ற நபர்களை எளிதாக இழுத்து விடலாம் என பாரதீய ஜனதா கருதுகிறது. அவ்வாறு வரும் எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதாவில் சேர்த்து ரங்கசாமி துணையுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக வருகிற ஜூலை மாதம் அமித்ஷா புதுவை வர இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதன் பிறகு இந்த நடவடிக்கைகள் தீவிரமாகலாம்.

ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரசை பாரதீய ஜனதாவுடன் இணைத்து விட வேண்டும் என்பது மோடியின் திட்டமாக உள்ளது. அதற்கு மட்டும் ரங்கசாமி சம்மதித்து விட்டால் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை எளிதாக செய்து விடலாம் என்று பாரதீய ஜனதா கருதுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்