சிறுமியை கர்பமாக்கிய வாலிபர் கைது..!
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்பமாக்கிய வாலிபர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்களத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் கனி. தொழிலாளியாகப் பணி புரிந்து வருகிறார். ஆர்.எஸ். மங்களத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் கனி.
சில தினங்களாக சிறுமி சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து சந்தேகமடைந்த பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். பின்னர், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கர்பமாக்கியது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். இளைஞர் கனி காதலிப்பதாக கூறி சிறுமியை இரு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. சிறுமியை கர்பமாக்கியதுடன் திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், சிறுமியை கர்பமாக்கிய ஆர்.எஸ். மங்களத்தை சேர்ந்த இளைஞர் கனி மீது திருவாடானை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.