காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் உண்டு : எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளதை உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாகக் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 14 புள்ளி ஏழு ஐந்து டிஎம்சி தண்ணீர் குறைப்பு தவிர, ஏற்கெனவே நடுவர் மன்றத் தீர்ப்பில் உள்ள அத்தனை அம்சங்களையும் அப்படியே செயல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.
உச்சநீதிமன்றமே இறுதியானது என்றும், அதன் பின்னும் அதில் சந்தேகம் எழுப்பினால் என்ன செய்வது என்றும் கேள்வி எழுப்பிய முதலமைச்சர், தீர்ப்பை படித்து பார்த்து கருத்து சொல்ல வேண்டும் என குறிப்பிட்டார்.