நீதிமன்ற பேச்சை கேட்காமல் ஹிந்தி பற்று.! மத்திய அமைச்சருக்கு தமிழக எம்.பியின் பதில்.!

Default Image

மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி , தமிழக எம்.பி சு.வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஹிந்தியில் குறிப்பிட்டதை குறித்து இணையத்தில் விமர்சித்துள்ளார் சு.வெங்கடேசன்.  

மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி அவர்களுக்கு , மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அவர்கள் குழந்தைகள் நலன் சார்பாக கடிதம் எழுதி இருந்தார்.

அதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி அவர்கள் பதில் கடிதத்தை எம்.பி சு.வெங்கடேசன் அவர்களுக்கு அனுப்பினார். அதில் சு.வெங்கடேசன் அவர்களை குறிப்பிடுகையில் இந்தியில் அடர்னியா வெங்கடேசன் ஜி (மதிற்பிற்குரிய வெங்கடேசன் அவர்கள்) என தொடங்கி பதில் கூறியுள்ளார்.

அதனை குறிப்பிட்ட அமைச்சர் சு.வேங்கைடேசன் அவர்கள், தனது டிவிட்டர் பக்கத்தில், ‘எனது கடிதத்திற்கு பதில் எழுதியுள்ள  அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்கள் “அடர்னியா வெங்கடேசன் ஜி” என்று விளித்திருக்கிறார். இந்தியில் பதில் எழுதக் கூடாது என்று உயர்நீதி மன்றம் கூறியும் இப்படி தங்களின் இந்தி பற்றை காண்பிக்கிறார்கள்.

இனி நாமும் அவரை “மதிப்பிற்குரிய Minister Smiriti Zubin Irani” என்று விளித்து எழுதலாம். அவரவர் தாய் மொழி அவரவர்க்கு உயர்ந்தது.’ என பதிவிட்டு தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் எம்.பி சு.வெங்கடேசன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்