சென்னையில் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிக அளவில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரப்பி வருகிறது. இதனிடையே, சென்னையில் சமீப காலமாக முன்பு இல்லாத அளவுக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதில் குறிப்பாக குழந்தைகள், இளம் வயதினர் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் உள்நோயாளிகள் பிரிவு நிரம்பி வழிகிறது. காய்ச்சல், சளி மற்றும் இருமல் ஆகியவை குழந்தைகளுக்கு வெகுவாக பரவுகிறது. இந்த காய்ச்சல் 3 அல்லது 4 நாட்களில் குறைந்தாலும், இருமல் குறைந்தது 2 வாரங்களுக்கு நீடிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சமயத்தில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100 குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.