7,100 ரூ பணம் தான் இருந்தது.. திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை.. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி.!
கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்று விட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தது.
தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு 2019, 2020-ஆம் ஆண்டுகளில் அளித்த புகாரின் அடைப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டு இருந்து.
இந்த சோதனை முடிந்ததை அடுத்து, எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், ‘ இது முதல்வர் ஸ்டாலினின் பழிவாங்குதல் நடவடிக்கை. இந்த ரெய்டு 3வது முறையாக நடைபெறுகிறது. ஏற்கனவே 2 முறை சோதனை நடத்தியும் ஒன்றும் இல்லை.
இப்பொது வெறும் 7,100 பணம் தான் இருக்கிறது. எனது அம்மாவிடம் சிறுது நகைகள் இருந்தது. வேறு எதுவும் இல்லை என அதிகாரிகளே எழுதி கொடுத்து விட்டு சென்றுவிட்டனர். காவல்துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துகிறது. என சரமாரியாக குற்றசாட்டுகளை முன்வைத்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.