தனுஷ், விஜய் சேதுபதியை பாருங்க…. தோற்றத்திற்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை.! இளம் நடிகை அதிரடி.!
சூர்யாவுக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி. இந்த படத்தில் அருமையாக நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. இவர் சமீபத்தில் வெளியான “வீட்டுல விவேசம்” என்ற படத்திலும் நடித்திருந்தார்.
இவர் தற்போது ஆகாசம், நித்தம் ஒரு வானம், சுந்தரி கார்டன்ஸ், பத்மினி, கப்பா, உலா, இனி உத்தரம், உள்ளிட்ட படங்களிலும் நடித்துவருகிறார். இதற்கிடையில் சமீபத்திய ஒரு பேட்டியில் தான் குண்டாக இருக்கிறீர்கள் என்று யாராவது சொன்னால், முதலில் வருத்தமாக இருந்ததாக பேசியுள்ளார்.
இதையும் படியுங்களேன்- அதுக்கு அவர் தான் சரியான ஆள்… சிம்புவை திருமணம் செய்ய ஆசைப்படும் கண்ணக்குழி அழகி.!
இது குறித்து பேசிய அவர் ” என்னிடம் முதலில் யாராவது நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் கொஞ்சம் வருத்தமாக இருக்கும். இப்போது அதயெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. எடை கூடுவதற்கு உடல் பிரச்சினைகளும் காரணமாக இருக்கிறது. ஒல்லியாக இருக்கும் நடிகைகளை மட்டுமே நாயகியாக ஏற்றுக்கொள்வார்களா என்பது எனக்கு புரியவில்லை.
தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோரின் பிரபலத்திற்கும் தோற்றத்துக்கும் சம்பந்தமே இல்லை. திறமைதான் முதலில் முக்கியம். ஆனால், நடிகைகள் என்று வரும்போது உடல் தோற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்” என்று அதிரடியாக பேசியுள்ளார் அபர்ணா பாலமுரளி.