பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்…!
பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை அனுராதாவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
பச்சையப்பன் கல்லூரி தமிழ் துறை பேராசிரியை அனுராதா, சாதிய பாகுபாடு பேசியிருந்த வீடியோ இணையத்தில் வைரலானாது. இதனையடுத்து அனுராதா கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக பதியப்பட்ட வழ்க்கை ரத்து செய்யக்கோரி பச்சையப்பன் கல்லூரி தமிழ்துறை தலைவர் பேராசிரியை அனுராதா தாக்கல் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
பேராசிரியையின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. அதனை தொடர்ந்து அனுராதாவுக்கு எதிரான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது என்றும், மேலும், வழக்கு தொடர்பாக அக்டோபர் 11ம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.