விமானத்தைக் கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்த மும்பை பயணி..!
விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் முதலாவதாக சேர்க்கப்பட்டுள்ளார் ,ஜெட் ஏர்வேஸ் விமானத்தைக் கடத்தப் போவதாக கடந்த ஆண்டு மிரட்டல் விடுத்த மும்பை பயணி.
மும்பை நகை வியாபாரியான பிர்ஜூ கிஷோர் சல்லா என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்தார். அப்போது விமானத்தைக் கடத்தப் போவதாக புரளி கிளப்பி பதற்றத்தை ஏற்படுத்தினார்.
இதன் விளைவாக ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் இன்னும் ஐந்து ஆண்டுகள் அவர் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நோ ஃபிளை லிஸ்ட் என்ற இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் பயணியாக அவர் உள்ளார்.
மற்ற விமான நிறுவனங்களுக்கும் ஜெட் ஏர்வேஸ் தகவல் அளிக்கும் பட்சத்தில், எந்த விமானத்திலும் அவரால் ஐந்து ஆண்டுகளுக்கு பயணிக்க முடியாது.