ரஷ்யாவில் வெடி விபத்து..!
ரஷ்யாவில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த வெந்நீர் குழாயில் ஏற்பட்ட வெடிப்பில் இருந்து முதியவர் ஒருவர் அதிசயமாக உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகி உள்ளன.
பர்நுல் ((Burnaul)) என்ற இடத்தில் சாலையில் முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அருகில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த வெந்நீர் குழாய் ஒன்று பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியது.
மேலும் அதிலிருந்து நீராவியும், வெந்நீரும் வேகமாக வெளியேறியது. இந்த வெந்நீர் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது கொட்டியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியுள்ளார். இந்த வெடிப்பினால் அருகிலிருந்த வீட்டு சுவர் ஒன்று இடிந்து போனது குறிப்பிடத்தக்கது.