திருப்பதி அருகே விபத்து..! 5 பேர் பலி..
திருப்பதி அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி.
மஹராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிலர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு பொலிரோ காரில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். திருப்பதியை அடுத்த மாமண்டூர் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் வண்ணம் அடிக்கும் பணிக்காக நின்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 4 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரின் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது