ஞானவாபி மசூதி வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! விரைவில் விசாரணை….
ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று தான் என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
உத்திர பிரதேச மாநில வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலைய பகுதியில் இருக்கும் ஞானவாபி மசூதி சுவரில் இந்து கடவுள் படங்கள் இருக்கிறது. அதற்கு பூஜைகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என 5 பெண்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்று கொள்ள கூடியது அல்ல என மசூதி தரப்பில் வழக்கு போடப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பளித்து உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று தான் என தீர்ப்பு வழங்கி உள்ளனர். இதன் மீதான விசாரணை வரும் செப்டம்பர் 22 முதல் தொடங்கும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இந்த தீர்ப்பை அப்பகுதி இந்துக்கள் முதல் வெற்றியாக கொண்டாடி வருகின்றனர்.