ஒரு நாளைக்கு 15 மணி நேரம்…கஷ்டத்தை புரிஞ்சுக்கோங்க… ரகுல் ப்ரீத் சிங் உருக்கம்.!
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் பெரிதா பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி, தற்போது ஹிந்தியில் டாக்டர் ஜி, Thank God , உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், சமீபத்திய ஒரு பேட்டியில், திரைத்துறையினர் ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வரை உழைக்கின்றனர். திரைத்துறையினரின் கஷ்டத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.
இதையும் படியுங்களேன்- பொண்ணுங்க குடிச்சா அது தான் நடக்கும்.. பெரியவங்க இதுக்காக தான் சொல்றாங்க.. ஷகீலா ஓபன் டாக்.!
இது தொடர்பாக பேசிய அவர் ” நான் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதான் விரும்புகிறேன். அதிலும் திகில் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தியேட்டரில் தான் பார்க்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வரை உதவி இயக்குனர்கள், லைட்மேன், கேமராமேன், உள்ளிட்ட திரைத்துறையினர் உழைக்கின்றனர். திரைத்துறையினரின் கஷ்டத்தை ரசிகர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்” என உருக்கமாக பேசியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.