செப்-15 ஆம் தேதி அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை…!
மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு செப்.15-ஆம் தேதி மாலையணிவித்து மரியாதை செலுத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
செப்.15-ஆம் தேதி அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு செப்.15-ஆம் தேதி மாலையணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.